Friday 6 January 2012

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்கக் கோரி கேரள முதல்வருக்கு 10,000 கடிதங்கள்: கோவை மாவட்ட ஜமாஅ முடிவு

கோவை: முல்லைப் பெரியாறு பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்று செயல்படுமாறு கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு 10,000 கடிதங்களை கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் சார்பில் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் பொதுச் செயலாளர் முஹமது அலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள மக்களிடம் தேவையில்லா அச்சத்தை ஏற்படுத்தி, அணையை அழிக்க, கேரளத்தின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஒற்றுமையுடன் ஓரணியில் திரண்டுள்ளனர். இதற்கு கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

இவர்கள் தமிழகத்தின் தண்ணீர் தேவையையோ, மாநிலங்களுக்கு இடையேயான நடைமுறை ஒப்பந்தங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதைப் பற்றியோ சிறிதும் சிந்திக்கவில்லை. மாறாக தர்மத்தையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பினையும் உதாசீனப்படுத்தி புதிய அணை கட்டுவோம் என விதண்டாவாதம் செய்கின்றனர்.

கேரள அரசின் இந்த செயல்பாடுகளால் இரு மாநில மக்களும், வாழ்க்கை முறை மற்றும் வணிகத்துறையில் பெரும் இடர்பாடுகளும், இன்னல்களும் அனுபவித்து வருகின்றனர்.

எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டு நடக்கக் கோரி கேரள முதல்வர் உம்ம ன்சாண்டிக்கு 10,000 கடிதங்கள், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அனுப்பிவைக்கப்படும்.

இப்பிரச்னையில் மத்திய அரசும், பிரதமரும் உடனே தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Coimbatore district all jamaath has decided to send 10,000 letters to Kerala CM Oommen Chandy asking him to implement the apex court's judgement in Mullai periyar issue. Chandy still tries his level best to get a new dam.

http://tamil.oneindia.in/news/2012/01/06/tamilnadu-01-06-mullai-periyar-row-coimbatore-jamaath-send-letter-aid0176.html

No comments:

Post a Comment