Tuesday 17 January 2012

கேரள அரசு சாந்தவேலின் மரணத்திற்கு மன்னிப்பு கோரி 25 லட்சம் வழங்கவேண்டும் - தி.வேல்முருகன்

கேரள மலையாளிகளால் படுகொலைசெய்ய பட்ட சாந்தவேல் கொலையாளிகள் மீது கொலைவழக்கு பதிவு செய்ய கோரி தமிழக வாழ்வுரிமைகட்சி நிறுவனர் பண்ருட்டி வேல்முருகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் :


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா கங்காபுரத்தை சேர்ந்த திரு.சாந்தவேல் சபரிமலைக்கு சென்ற போது அங்கு கேரளாவை சேர்ந்த கொடுர மலையாளிகளால் சுடு நீர் அவர் உடல் மீது ஊற்ற பட்டு கோட்டயம் அரசு மருத்துவமனையில் சேர்க்க பட்டு இருக்கிறார்.இது சம்ந்தமாக வழக்கும் பதிவு செய்ய படாமல் விபத்து என்று கேரள காவல் துறையால் அவரது குடும்பத்திற்கு தகவல் தெரியபடுத்தபட்டு இருக்கிறது. பின்னர் அவர் குடும்பத்தினர் அவரை அங்கிருந்து மீட்டு சென்னை கீழ்பாக்கம் மருத்துவ மனையில் சேர்த்தனர் சிகிச்சை பலனில்லாமல் அவர் மரணத்தை தழுவினார்.

முல்லைபெரியார் பிரச்சனையில் கேரளா தொடர்ந்து தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கும் மிகப்பெரிய தேசிய இனபிரச்சனையை வளர்த்து விட்டிருக்கிறது.கேரளாவில் தொடந்து தமிழர்கள் மற்றும் அப்பாவி தமிழ் கூலி தொழிலாளிகள் தாக்க படுவதும், தமிழ் பெண்கள் மான பங்கபடுத்த படுவதும், அவர்கள் வீடுகள் சூரையாடப்படுவதும் தொடர்கதையாகிவிட்டது.அதன் உச்சகட்டமாக ஒரு தமிழன் மலையாளிகளால் கொடுரமாக கொல்லப்பட்டு இருக்கிறான்.தனக்கு என்ன நடந்தது என்பதை சாந்தவேல் மரணவாக்கு மூலமாக பதிவு செய்திருக்கிறார்.

அதன் படி குற்றவாளிகள் தப்பிக்காமல் இருக்க கேரள அரசு அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும்.அவர்களுக்கு தக்க தண்டணயை வழங்க வேண்டும்.மேலும் சட்டம் ஒழுங்கை பாது காக்காத கேரள அரசு சாந்தவேலின் மரணத்திற்கு மன்னிப்பு கோரி 25 லட்சம் வழங்கவேண்டும்.மேலும் கேரளாவில் வாழும் தமிழர்களுக்கு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.செய்ய தவறினால் 50 லட்சம் மலையாளிகளை தங்கள் சகோதர்களாக நினைத்து கொண்டிருக்கும் தமிழர்கள் மத்தியில் வெறுப்புணர்வு ஏற்பட்டு இங்கு வாழும் மலையாளிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகும் என்பதில் சிறிதளவும் ஐய்யமில்லை.

தமிழக முதலமைச்சர் போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்து விரமரணத்தை தழுவிய சாந்த வேலுக்கு தமிழக முதல்வர் நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் வழங்கி ஏழ்மையை எதிர்நோக்கி இருக்கும் அவர் மனைவிக்கு அரசு வேலையும் அவர்கள் குழந்தைக்கு இலவச கல்வி வழங்கி உத்தரவிடவேண்டும் மேலும் கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுத்து தமிழர்களின் பாது காப்பை உறுதி செய்ய வேண்டும்.

சீக்கியர்கள் அயல் நாடுகளில் தாக்க பட்டபோது குரல் கொடுத்த பிரதமர் மன்மோகன் சிங் சொந்த நாட்டில் கொல்லபட்ட போது என்ன செய்ய போகிறார் என்று தெரியவில்லை மேலும் காங்கிரஸ் கட்சி கடுமையான நடவடிக்கைகள் கேரள அரசு மீது எடுக்கா விட்டால் தொடந்து தமிழர்களை மாற்றான் தாய் பிள்ளைகளாக நடத்தும் மத்திய அரசு மீது தமிழர்கள் தங்களுடைய கண்டனத்தை கடுமையாக தெரிவிப்பார்கள் .பிகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞன் மும்பையில் கொல்லபட்டபோது பிகாரில் என்ன நடந்த்ததோ அதை விட பலமடங்கு இங்கும் நடக்கும் என்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.நாளை காலை திருவேற்காடு சாந்தவேல் வீட்டில் நடைபெறும் கண்டன கூட்டத்திற்கு தமிழக மக்கள் சாதி மதம் ,கட்சிகளை கடந்து கலந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

No comments:

Post a Comment