Friday 30 December 2011

'டேம் 999‘ படத்துக்கு பதிலடி : ‘அணை 555‘

டேம் 999‘ படத்துக்கு பதிலடி கொடுக்கும்விதமாக, முல்லை பெரியாறு அணை பாதுகாப்பானது என்பதை விளக்கி ‘அணை 555‘ என்ற பெயரில் புதிய சினிமா தயாரிக்கப்படுகிறது. இந்திய குற்றவியல் கழக மதுரை கிளை நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் மதுரையில் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செயலாளர் கோபிநாத் கூறியதாவது:

குற்றவியல் கழகம் சார்பில் மக்களின் சட்ட, அடிப்படை உரிமை, மனித உரிமை, நுகர்வோர் உரிமை, சுற்றுப்புறச் சூழல் உரிமைகளை காக்க மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மக்கள் நிலையம் அமைக்கப்படும். கேரளாவில் வன்முறைச் செயல்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்காக டிச.31, ஜன.1 ஆகிய தேதிகளில் சட்ட உதவி முகாம் நடத்தப்படும். மேலும் முல்லை பெரியாறு அணை பற்றி தமிழ்நாடு மூத்த பொறியாளர் சங்கம் வெளியிட்டுள்ள சிடிக்கள் 6 மாவட்ட மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உண்மை என்ன, அதன் தீர்வு என்ன என்பது குறித்து தமிழ்நாடு மூத்த பொறியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள சிடியை மையமாக வைத்து ‘அணை 555‘ என்ற சினிமா எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை முதல் நாளில் படத்தை வெளியிட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

டேம் 999 படத்தில் பெரியாறு அணை உடைந்து பேரழிவு ஏற்படுவது போல் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தமிழகத்தில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரியாறு அணையின் உண்மை நிலையை விளக்கி ‘அணை 555‘ படம் தயாரிக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Thursday 29 December 2011

முல்லைபெரியாறு பாடல் - காணொளி

நித்திரையா தமிழா நீ கொஞ்சம் நில்லடா

http://www.youtube.com/embed/pLwMZh0mhZM



புறப்படடா தமிழா புறப்படடா

http://www.youtube.com/embed/sxKJqIu317w

முல்லைபெரியாறு காக்க ஒன்றுகூடல் - காணொளி






மெரினா பேரணியில் 'பறை அடி'..



முல்லைப் பெரியாறை காக்க சென்னை மெரீனாவில் ஊர்வலம்










சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் ரயில் மறியல் போராட்டம்

முல்லைப்பெரியார் விவகாரத்தில் மத்திய,கேரளா அரசுகளை கண்டித்து நேற்று சிதம்பரத்தில்,விடுதலைச் சிறுத்தைகள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர் இதில் 150 அதிகமான தோழர்கள் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டனர்

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தீக்குளித்தவரின் குடும்பத்துக்கு ரூ 1 லட்சம்


சென்னை, டிச.29: முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்ட தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த ராமமூர்த்தியின் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் ரூ 1 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம் சின்னமனூர் நகரைச் சேர்ந்த அ.தி.மு.க தொண்டரான ராமமூர்த்தி பாத்திரம் தொழில் செய்துவந்தார். கடந்த சில நாட்களாக நடைபெற்றுவரும் முல்லைப்பெரியாறு அணை தொடர்பான பிரச்னையால் மிகுந்த மனவருத்தத்துடன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று சின்னமனூரில் முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக கேரளா அரசை கண்டித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் நடைபெற்ற கண்டன பேரணியில் கலந்துகொண்டு பின்னர் தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்டார். இதனை அறிந்த முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க சார்பில் ரூ.1லட்சம் தொகையினை இறந்தவரின் குடும்பத்தினர்களுக்கு வழங்கி ஆறுதல் கூறிவர நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை தேனி மாவட்டம் சின்னமனூர் நகருக்கு நேரில் அனுப்பி அனுப்பிவைத்தார்கள்.

அதன்படி ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் சின்னமனூர் நகருக்கு உடனடியாக புறப்பட்டு சென்று இறந்தவரின் சகோதரி செல்வி, சகோதரர்கள் முருகன், வேல்சாமி, செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு ஆறுதல்கூறி அ.தி.மு.க சார்பாக ரூ.1 லட்சம் தொகையினை வழங்கினார்.

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=529851&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

முல்லைப் பெரியாறு அணையை நிச்சயம் காப்போம், உயிர் துறக்க வேண்டாம்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்

முல்லைப் பெரியாறு அணையை நிச்சயம் காப்போம், உயிர் துறக்க வேண்டாம்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் கேரள அரசின் அடாவடித்தனமான அரசியலால் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுவிடுமோ என்கிற அச்சம் காரணமாக தான் உயிர் தியாகம் செய்வதாகக் கூறி, தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த சின்னராசின் மகன் இராமமூர்த்தி விஷம் அருந்தி உயிர் துறந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. கொண்ட கொள்கைக்காக உயிரைத் துறப்பது என்பது தமிழினத்தின் தனித்தன்மையாகும். அந்த அடிப்படையில் தமிழனின் உரிமை முல்லைப் பெரியாறு அணையில் பறிக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சி, அதனை தன் உயிரைத் தந்தாதவது தடுத்து நிறுத்திட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடனேயே இராமமூர்த்தி விஷம் அருந்தி தனது இன்னுயிரை ஈந்துள்ளார் என்று அறியும்போது அவருக்காக
வீரவணக்கம் செலுத்துகிறது நாம் தமிழர் கட்சி.

கேரள அரசும், அம்மாநில அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து மேற்கொண்டுவரும்திட்டமிட்ட பரப்புரையே முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் இரண்டுஉயிர்கள் பறிபோகக் காரணமாகும். கடந்த 19ஆம் தேதி தேனியில் செயப்பிரகாசு என்று இளைஞர் தனது உடலில் தீயை மூட்டிக்கொண்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து கடந்த 22ஆம் தேதி இராசபாளையம் ஒன்றியம், சீலையம்பட்டியைச் சேர்ந்த தே.மு.தி.க. தொண்டர் சேகர் விஷம் அருந்தி உயிர்த் தியாகம் செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து இப்போது இராமமூர்த்தியும் உயிர்த் தியாகம் செய்துள்ளார். தென் தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கும் வாழ்விற்கும் அடிப்படை ஆதாரமாகவுள்ள முல்லைப் பெரியாறு ஆற்று நீரை ஒருபோதும் இழந்துவிடாதீர்கள் என்று தங்கள் இன்னுயிரை ஈந்து நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள் இந்த தியாகிகள். எனவே முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில், தமிழனின் உரிமை மீட்கும் அந்தப்போராட்டத்தில் நாம் வென்றே தீர வேண்டும், வெல்வோம் அது உறுதி. அதே நேரத்தில் நாம் முன்னெடுத்துள்ள இந்தப் போராட்டத்தை வெற்றி பெறும் வரை ஓயாது நடத்த வேண்டிய நிலையில், இப்படிப்பட்ட தன்னலம் பாரா தமிழர்கள் தங்கள் உயிரை இழப்பது வேதனையைத் தருகிறது. தென் தமிழ்நாட்டிலுள்ள ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதரத்தைக் காக்க மறியல், ஆர்ப்பாட்டம், பொருளாதாரத் தடை என்று பல்வேறு வழிகளில் நம்மால் போராடி வெற்றி பெற முடியும். நம் போராட்டம் தீ பற்றி எரியலாம் தவிர, போராளிகள் எரிந்துவிடக் கூடாது.

எதற்காக உயிரைத் துறக்க வேண்டும்? முல்லைப் பெரியாற்றில் நம் உரிமையைபறித்து நம் மக்களின் வயிற்றில் அடிக்க முற்பட்டுள்ள கேரள அரசியல்வாதிகளுக்கு அவர் மொழியிலேயே பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இங்கிருந்து செல்லும் பொருட்கள் பெருமளவிற்கு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாற்று அணைத் திட்டத்தை கைவிடும்வரையும், முல்லைப்பெரியாறு அணையில் 142 அடிக்கு நீர் தேக்கும் வரை நமது போராட்டம் தொடரும். அப்படிப்பட்ட போராட்டத்தில் தொடர்ந்து பங்கேற்று வலிமை சேர்க்கவே இளைஞர்கள் தயாராக வேண்டுமே தவிர யாரும் உயிரை இழக்க வேண்டியதில்லை.

முல்லைப் பெரியாறு அணையை உடைத்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டுவரும் கேரள அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள எழுச்சியைக் கண்டு அரண்டு போயுள்ளார்கள். நாம் தோற்கவும் மாட்டோம், அணையை விட்டுத் தரவும் மாட்டோம். உயிரைக் காக்கவே நாம் போராடுகிறோம். அதற்கு உயிரைத் தியாகம் செய்யத் தேவையில்லை, உணர்வுடன் நின்று போராடினாலே நம் உரிமையை வென்றெடுத்துவிட முடியும்.

முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக யாரும் உயிர் நீக்க வேண்டாம்- வைகோ வேண்டுகோள்

சென்னை: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக்காக யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தேனி மாவட்டத்தில் சின்னமனூரை சேர்ந்த ராமமூர்த்தி என்னும் இளைஞர் முல்லைப்பெரியாறு அணையைக் காக்க இன்னும் தீர்வு ஏற்படவில்லையே என்று மனம் உடைந்து விஷம் அருந்தி உயிர் நீத்துள்ளார் என்ற செய்தி தாங்க முடியாத மனவேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

உயிர்த் தியாகம் செய்த ராமமூர்த்தியை இழந்து கண்ணீரில் தவிக்கும் அவரது சகோதரர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கட்சி, சாதி, மத எல்லைகளை கடந்து மொத்த தமிழகமும் முல்லைப்பெரியாறை காக்க கிளர்ந்து எழுந்துள்ளது. எனவே, வாழ்ந்து போராட வேண்டிய வாலிபர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள முனைய வேண்டாம் என்று மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

English summary

MDMK general secretary Vaiko has urged the youths not to bid for suicides for the sake of Mullaiperiyar issue. He has asked the people of the state to unite and fight for rights

http://tamil.oneindia.in/news/2011/12/29/tamilnadu-don-t-indulge-suicide-bids-vaiko-aid0091.html

முல்லைப் பெரியாறு விவகாரம்: தேனி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

தேனி: முல்லைப் பெரியாறு விவகாரம் காரணமாக தேனி அருகே வாலிபர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக தேனி மாவட்டம் உள்பட மாநிலத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன. சிலர் மனமுடைந்து தற்கொலையும் செய்து கொள்கின்றனர்.

இந்நிலையில் தேனி அருகே உள்ள சின்னமனூரைச் சேர்ந்த ராமமூர்த்தி(35) என்பவர் முல்லைப் பெரியாறு விவகாரம் காரணமாக விஷம் குடித்தார். உயிருக்குப் போராடிய அவரை சிகிச்சைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிர் இழந்தார். இதேபோன்று கடந்த வாரம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ஜெயப்பிரகாஷ் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.மேலும் தேனி அருகே உள்ள சீலையம்பட்டியைச் சேர்ந்த இடிமுழக்கம் சேகர் என்பவரும் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

நேற்று மதுரையில் வழக்கறிஞர்கள் இருவர் உயரமான கட்டிட உச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றனர். அப்போது அவர்களை மதுரை கலெக்டர் சகாயம் சமாதானப்படுத்தி தற்கொலை முயற்சியை கைவிடச் செய்தார்.

முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும், யாரும் தற்கொலை முயற்சியில் ஈடுபடக் கூடாது என்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன.



English summary
A 35-year old Ramamurthy from Chinnamur has committed suicide by consuming poison over Mullai Periyar row. Last week a car driver from Theni had immolated himself to death over the same issue.

அணையைக் காக்க சின்னமனூரில் 20 ஆயிரம் பேரணி – சிதம்பரத்தில் ரயில் மறியல்

வியாழக்கிழமை, டிசம்பர் 29, 2011, 12:01

சின்னமனூர்: முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து புதன்கிழமையன்று சின்னமனூரில் 20 ஆயிரம் பேர் கண்டன பேரணி நடத்தினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி சிதம்பரத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 107 பேர் கைது செய்யப்பட்டனர்.

முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்து விட்டது என்று கூறி அதனை இடித்துவிட்டு புதிய அணை கட்ட கேரளா அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அணையில் இருந்து பாசன வசதி பெறும் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கடந்த 23 நாட்களாக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மறியல் என பல்வேறு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் எல்லைப் பகுதியில் கூடி தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கண்டன ஊர்வலம்

இந்த நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூரில் கேரள அரசை கண்டித்து 41 சமுதாயங்களை சேர்ந்த மக்கள் சார்பில் புதன்கிழமையன்று கண்டன ஊர்வலம் நடைபெற்றது. சுமார் 20 ஆயிரம் பேர் திரண்டு பழைய பாளையம் வழியாக மார்க்கையன்கோட்டை விலக்கு பகுதிக்கு ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்கள் பல இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக வந்து அரசு மருத்துவமனை, தேரடி திடலில் ஊர்வலத்தை நிறைவு செய்தனர்.

ரயில் மறியல்

அணைப் பிரச்சினையில் சுமூக முடிவு காணாத மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் சிதம்பரத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து பாலமான் வாய்க்கால் வழியாக அவர்கள் ஊர்வலமாக சென்ற போது அவர்களை போலீசார் தடுத்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது மறியலுக்கு முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் 14 பேர் கொண்ட ஒரு குழுவினர் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி பகல் 12.25 மணிக்கு வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறிக்க தண்டவாளத்தில் சிவப்பு நிற துணியை காட்டியபடி ஊர்வலமாக சென்று உசுப்பூர் ரெயில்வே கேட் அருகே மறித்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

சேலம், திண்டுக்கல் கடையடைப்பு

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல் படுத்த வலியுறுத்தி திண்டுக்கல் நகர வியாபாரிகள் புதன்கிழமையன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி சேலம் மாவட்டத்தில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்துக்கு வியாபாரிகள் அழைப்பு விடுத்து இருந்தனர். இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய வர்த்தக கேந்திரங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இரு மாவட்டங்களிலும் நடைபெற்ற வேலை நிறுத்தம் காரணமாக 100 கோடி ரூபாய்க்கு கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

அணைப் பிரச்சினையில் சுமூக முடிவு காண வலியுறுத்தி திருவானைக்காவல் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தம், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 500-க்கும் மேற்பட்ட மணல் லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால் அரசுக்கு ரூ.2 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


English summary
Nearly 20,000 people attended the rally in Chinnamanur urging to save the Mullaiperiyar dam.

http://tamil.oneindia.in/news/2011/12/29/tamilnadu-thousand-hold-rally-chinnamanur-mullaiperiyar-aid0091.html

முல்லைப் பெரியாறு விவகாரம்: கேரள அரசை கண்டித்து புதுக்கோட்டையில் மனித சங்கிலி

புதுக்கோட்டை: முல்லைப் பெரியாறு விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத கேரள அரசை கண்டித்து புதுக்கோட்டையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

தென் மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயப் பணிகளுக்கு ஆதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு பிரச்னையில் மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் உடனே தலையிட்டு சுமூக தீர்வு ஏற்படுத்தி தமிழக, கேரள மக்களின் சகோதரத்துவம், தேசிய ஒருமைப்பாடு உள்ளி்ட்டவற்றை பாதுகாக்க வேண்டும். மத்திய அரசு கூடங்குளம் அணு மின் நிலைய பணிகளை விரைந்து முடித்து, அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை விரைவில் தொடங்கி தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் மற்றும் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத கேரள அரசை கண்டித்து புதுக்கோட்டையில் இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை அண்ணா சிலை அருகே மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இந்த மனித சங்கிலி அண்ணா சிலையில் இருந்து தொடங்கி கீழராஜ வீதி, பிருந்தாவனம, வடக்கு ராஜவீதி, திலகர் திடல், மேல 4 ம் வீதி, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், மின்சார அலுவலகம் வழியாக மீண்டும் அண்ணா சிலையில் முடிவடைந்தது. 

இந்த போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகர்கள், ரோட்டரி அமைப்புகள், தொழிலாளர்கள், கல்வியாளர்கள், தொண்டு நிறுவனத்தினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.



English summary
A human chain protest was held in Pudukootai to oppose the Kerala government's decision in Mullai Periyar issue.

'முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மெளனம்... ஹஸாரே போராட்டத்துக்கு மட்டும் ரஜினி ஆதரவா?'


தமிழரின் ஜீவாதாரப் பிரச்சனைகள் வெடிக்கும் போதெல்லாம் உஷாராக மெளனம் காக்கும் ரஜினிகாந்த், விஜய் போன்ற நடிகர்கள், அன்னா ஹஸாரேவின் போராட்டத்துக்கு ஓடி ஓடி ஆதரவளிப்பது தவறானது என்று தமிழ் உணர்வாளர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக இணையத்தளங்களிலும் இதுகுறித்து கடுமையான விமர்சனங்களை ரஜினி உள்ளிட்ட நடிகர்கள் மீது வைத்துள்ளனர்.

சினிமா தவிர்த்து சமூக- அரசியல் ரீதியாக ரஜினியின் நடவடிக்கைகள் தொடர்ந்து மிகக் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் மிக மோசமான விளைவுகளை தமிழகத்தில் உருவாக்கியுள்ளது. அரசியலுக்கு அப்பால் நின்று அனைவரும் தமிழக விவசாயிகளுக்காக குரல் கொடுத்து வருகின்றனர். கேரளாவின் பொய்ப் பிரச்சாரம், விஷமத்தனம், தமிழகத்தின் உரிமையை பறிக்க அவர்கள் நடத்தும் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தும் பணியில் தாங்களாகவே முன்வந்து ஈடுபட்டு வருகின்றனர். முன்னணி இயக்குநர்கள் பலரும் இதில் அக்கறை காட்டுகின்றனர்.

ஆனால் ரஜினி, கமல், விஜய், அஜீத் என எந்த முன்னணி நடிகரும் தமிழகத்தில் இப்படியொரு விஷயமே நடப்பது போல காட்டிக் கொள்ளவில்லை.






ஆனால் 'கெழவிய தூக்கி மனையில் வை' என்ற வழக்குச் சொல்லை மெய்ப்பிப்பது போல, ஹஸாரேவின் உண்ணாவிரதத்துக்கு ராகவேந்திரா மண்டபத்தை இலவசமாகக் கொடுத்துள்ளார் ரஜினி இந்தப் போராட்டத்துக்கு தனது ஆதரவு உண்டு என்றும் அறிவித்துள்ளார் (ஆனால், இதில் 10 பேர் கூட கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!).

இதுதான் முல்லைப் பெரியாறுக்காகவும் கூடங்குளத்துக்காகவும் போராடிக் கொண்டிருக்கும் தமிழ் உணர்வாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

'கேரளத்தின் வஞ்சகத்தனத்தால் தமிழகத்தின் ஒரு பகுதியே வறண்டு பாலையாகும் அபாயம் உள்ளது. தமிழகமே ஒட்டுமொத்தமாக கொந்தளித்து எழுந்துள்ள இந்த சூழலில், அதுகுறித்து வாய் திறக்காத, தமிழர்களின் உரிமைகளுக்காக கிஞ்சித்தும் குரல் கொடுக்காத ரஜினி, நாடாளுமன்ற அமைப்பையே கேலிக்குரியதாக்கிக் கொண்டிருக்கும் ஹஸாரேவுக்கு ஆதரவளிப்பதா?', என முல்லைப் பெரியாறு அணை மீட்புக் குழுவினர் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.

டெல்லிக்குப் போய் ஹஸாரேவுக்கு ஆதரவு காட்டத் தெரிந்த விஜய்க்கு இங்கிருக்கும் தேனிக்குப் போய், முல்லைப் பெரியாறு அணை காக்க போராடும் நம் உறவுகளுக்கு குரல் கொடுக்கத் தெரியாதா" என்று கேள்வி எழுப்பியுள்ளனர் முல்லைப் பெரியாறு போராட்டக்காரர்கள்.

ஹஸாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கும் நபர்களுக்கு ரஜினி தன் மண்டபத்தைக் கொடுத்திருப்பதற்கு திரையுலகினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். குறிப்பாக முல்லைப் பெரியாறு விவகாரத்தில் களம் இறங்கியுள்ள பாரதிராஜா, தங்கர் பச்சான் போன்றவர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். ரஜினியின் ரசிகர்களே கூட இதை பெரிதாக வரவேற்கவில்லை என்பது, இந்த உண்ணாவிரதத்துக்கு வந்த 10 பேரைப் பார்த்தபோதே புரிந்துவிட்டது.


English summary
Tamil activists strongly condemned Rajini, Kamal, Vijay and other actors for not giving voice to save Mullai Periyar issue and supporting Anna Hazare.

http://tamil.oneindia.in/movies/heroes/2011/12/28-tamil-activists-condemn-rajini-vijay-aid0136.html

டைம்ஸ் ஒப் இந்தியாவை புறக்கணிப்போம் - படங்கள்

சென்னை மெரினா கடற்கரையில் முல்லைபெரியார்ற்றை  காக்க  நடந்த பேரணி