Monday 2 January 2012

தேனியில் தீக்குளித்து இறந்த ஜெயபிரகாஷ் நாராயணன் உடலுக்கு அதிமுக-மதிமுக அஞ்சலி


தேனி.டிச.- 03 - தேனியில் முல்லை-பெரியாறு அணை பிரச்சனைக்காக பங்களாமேட்டில் குடியிருக்கும் டாக்ஸி டிரைவர் ஜெயபிரகாஷ் நாராயணன் தேனி நேருசிலை முன் கேரள அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்து தன் உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டதனால் பலத்த காயம் ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாக இவரை தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு இவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மதுரை மருத்துவமனையில் இவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி 01.01.12. மாலை இவர் இறந்து விட்டார். இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தேனி பங்களாமேட்டில் உள்ள இவருடைய வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இது குறித்த தகவல் அறிந்து அதிமுக சார்பில் தேனி மாவட்ட செயலாளர் சிவக்குமார், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், ஆட்சிமன்ற குழு உறுப்பினர் சையதுகான், தேனி நகர செயலாளர் முருகேசன், நகர்மன்ற துணைத்தலைவர் காசிமாயன், மகளிரணி செயலாளர் தனலட்சுமி, முருக்கோடை ராமர், நகர்மன்ற உறுப்பினர் வைகை கருப்பு, மாவட்ட பஞ்சாயத்து குழுதலைவர் மகாலிங்கம், போடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் போதுமணி, தேனி ஒன்றியகுழு உறுப்பினர் கிருஷ்ணசாமி, முன்னாள் தேனி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் உள்ளிட்ட கழக உறுப்பினர்கள் இவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் நடைபெற்ற ஜெயபிரகாஷ் நாராயணன் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பின்னர் மதிமுக பொதுசெயலாளர் வைகோ, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொறுப்பு செயலாளர் தமிழன், பாரதிய பார்வர்டு பிளாக் முருகன்ஜி, தேனி தொழிலதிபர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பலரும் இவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, இவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மதிமுக பொதுசெயலாளர் வைகோ இவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி ரூ.25 ஆயிரம் நிதிஉதவி வழங்கினார்.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெரியகுளம் சப்-கலெக்டர் அனிதா இவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, இவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இறுதி ஊர்வலத்தில் ஆட்டோ டிரைவர்கள், வேன் டிரைவர்கள், உரிமையாளர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

http://www.thinaboomi.com/2012/01/02/9455.html

No comments:

Post a Comment