பல்லாயிரக்கணக்கிலே திரண்டிருக்கிறோம். இது, எதிர்பாராத வெற்றியை பெற்றுள்ளது.
திருமுருகன் கேட்டுக்கொண்டதன்படி, முல்லைப் பெரியாறுக்காக தலைநகரிலும் குரல் எழ வேண்டும் என்று கூறினார். அப்போது, முல்லைப் பெரியாறு போராட்டக் களத்தில் இருந்தேன்.
அதைத் தொடர்ந்து, இயக்கத்தின் அடையாளத்தை கட்சிக் கொடிகளைத் தவிர்த்துவிட்டு இங்கு வந்திருக்கிறோம். காரணம், திருமுருகன் போன்ற இளைஞர்களின் உணர்வுதான். இதற்கு நல்ல முன்னுதாரணம், மூவரின் உயிர் காக்க நிகழ்த்திய மெழுகுவர்த்தி ஏந்தல் போராட்டம்.
இப்போது கூடியிருப்பதற்கான நோக்கம், தமிழர்களுக்கானது. இந்த நிகழ்ச்சியில் இப்படி ஒரு கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. கிறிஸ்துமஸ் பண்டிகைத் திருநாளில் இங்கே கூடியிருக்கிறோம்.
இணையதளத்தை பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான இளம் தம்பிமார்கள் இங்கு மக்களுக்காக வந்திருப்பது பெருமிதம் கொள்ளச் செய்கிறது.
தமிழ் இளையத் தலைமுறையினர் மீது நம்பிக்கை வந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் நெஞ்சில் ஆழத்தில் இருந்து உரைகளைத் தந்திருக்கிறார்கள். தெற்குச் சீமையில் மண்வாசனையைப் படைபாக்க தந்திருக்கும் பாரதிராஜா, இயக்குனர் கெளதமன், தங்கர்பச்சான், கவிஞர் தாமரை,
'அணை உடைந்தால் இந்தியா உடையும்' என இளைஞர்கள் கோஷம் எழுப்பினர். நான் சொல்லிக்கொள்கிறேன்.. அணை உடையாது; இந்தியா உடையும்.. அணையை நெருங்க விடமாட்டோம்.
முத்துக்குமார் தன்னுயிரை மாய்த்த போது, புரட்சி வெடிக்காத சூழல் அப்போது ஏற்பட்டது. இப்போது அப்படி நடக்காது. தமிழகம் எழுச்சி கொண்டிருக்கிறது.
அணையில் ஒரு சிறு சேதம் ஏற்பட்டால், குடிக்கவே தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டால், இளைஞர்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.
உங்கள் கேரள முதல்வரிடம் சொல்லுங்கள்... அணையை உடைக்கும் முடிவை கைவிட்டுவிட்டோம் என்று சொல்லச் சொல்லுங்கள்.
கேரளாவில் காங்கிரஸ் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். அங்கு காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.
தமிழகம் பொறுமை காக்கிறது. நிபுணர் குழு ஆய்வு செய்வதற்கு முன்பே கேரள அரசு, ஆனந்த் கமிட்டியிடம் ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறது. அதன் 36-வது பக்கத்தில், இது கேரளத்துக்குள்ளே ஓடும் நதி. எனவே, தமிழ்நாட்டுக்கு தண்ணீருக்கான் உரிமையே இல்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது உண்மையா?
பிரிட்டன் காலத்தில் போடப்பட்ட 999 ஆண்டு கால ஒப்பந்தம் செல்லாது என்றால், இந்தியா போட்ட எந்தச் சட்டமும் செல்லாது.
கடிதங்களை அனுப்பி ஏமாற்றினார், ஒரு முதல்வர். எனவே, இப்போது கடிதம் எழுதி பிரயோஜனம் இல்லை. களத்தில் இறங்க வேண்டும்.
அணையை உடைக்க விடமாட்டோம். மத்திய போலீஸ் வராவிட்டால் என்ன? மிலிட்டரி வந்தால் என்ன? தென் தமிழ்நாடு மட்டுமல்ல.. சென்னை உள்பட முழு தமிழகமே திரண்டுவிட்டது.
அணையை உடைக்க விடக்கூடாது என்று ஒரு பெண்மணி சொன்னார். அப்போதுதான் முழு நிம்மதி பிறந்தது.
நியாயமாக போராடி கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களை விடுவிக்க வேண்டும்.
மத்திய போலீஸ், மிலிட்டரி வராவிட்டால் என்ன? தென் தமிழ்நாடு மட்டுமல்ல.. சென்னை உள்பட தமிழகமே திரண்டுவிட்டது.
கர்நாடகம், ஆந்திரா கூட நம் தயவில்லாமல் சிறுது காலம் இருக்கலாம். ஆனால், நாம் இல்லாவிட்டால், கேரளாவில் வாழ்க்கையை ஓட்ட முடியாது. நம்மை பகைத்தால் அவர்களால் வாழ முடியாது.
தமிழகத்தில் மலையாளிகள் தாக்கப்படமாட்டார்கள். தமிழர்கள் ஒருபோதும் நிராயுதபாணிகளை தாக்கியதில்லை.
தொடர்ந்து தவறு செய்த நினைத்தால், மக்களே தயாராகி முற்றுகை போராட்டம் மேற்கொள்வர். அதன் மூலம், கேரளாவுக்கு நிரந்தரப் பொருளாதார தடை ஏற்படும்.
இதைக் கருத்தில் கொண்டு, புதிய அணை என்ற முடிவை கேரள அரசு கைவிட வேண்டும் என்று எச்சரிக்கிறேன்.
முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு வழங்க மறுக்கிறது. இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிலும் அதிருப்தி இருக்கிறது. கேரள போலீஸ் பாதுகாப்பு அளிக்கும் என்கிறது உச்ச நீதிமன்றம். என்ன ஆகும்?
உச்ச நீதிமன்ற தீர்ப்பை காலில் போட்டு மிதித்த்திருக்கிறது, கேரள அரசு. அதற்குப் பிறகும் மத்திய படை பாதுகாப்பு அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் சொல்வதில் எங்கே நீதி இருக்கிறது.
சென்னையில் இருந்து டெல்லி திரும்புவதற்குள், முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய வகை செய்யும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுக்கொள்கிறேன்.
இந்தக் கடற்கரையில், முல்லைப் பெரியாறு உரிமை காக்க திருமுருகன் ஏற்பாடு செய்ய இந்த நிகழ்ச்சிக்கு நன்றி.
முல்லைப் பெரியாறு அணையை காப்போம்; கேரள சதிதிட்டத்தை உடைப்போம்.
-நன்றி விகடன்
No comments:
Post a Comment