இன்று பிற்பகல் கண்ணகி சிலையில் இருந்து கலங்கரை விளக்கம் நோக்கி முல்லை பெரியாறு காக்க பல்லாயிரம் பேர் கலந்து கொண்டடனர் . மாபெரும் பேரணியை மக்கள் போராளி வைகோ தலைமை ஏற்று வழி நடத்தினர் . இதில் தமிழர் நலனில் அக்கறை கொண்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர் . இந்த ஆர்பாட்டத்தை மே 17 இயக்க திருமுருகன் அவர்கள் ஒழுங்கு செய்திருந்தார் . காணொளி மிகவிரைவில் இணைக்கப்படும்.
இப்போராட்டத்தின் போது பாரதிராஜா பேசுகையில், ‘’முல்லைபெரியார் அணை பிரச்சனை பற்றி நடிகர் சங்கம் குரல் கொடுக்காதது ஏன்? ’’ என்று கேள்வி எழுப்பினார். அவர் மேலும், ’’தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை கைவிடவேண்டும். தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்க வேண்டும்’’ என்று கோரிகை வைத்தார். ‘’தமிழர்கள் இனியும் ஏமாந்தால் தமிழகம் பாலைவனமாகிவிடும்’’ என்றும் கருத்து தெரிவித்தார்.
நன்றி தமிழ்த்தாய் இணையத்தளம்
http://www.tamilthai.com/newsite/?p=2321#
No comments:
Post a Comment