Wednesday, 21 December 2011

கேரள சாலைகளை முடக்கும் போராட்டம் - தேனியில் வைகோ








முல்லைப்பெரியார் அணைகாக்க நடத்தப்பட்ட கேரள சாலைகளை முடக்கும் அறவழி போராட்டத்திர்க்கு வைகோ தேனியில் இருந்து கிளம்பும்போதே வைகோ வாகனத்தின் முன்னும் பின்னும் 100-ம் மேற்ப்பட்ட காவல்துறை வாகனங்கள் சென்றன.. வைகோ வாகனத்தின் பின்னால் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த மக்களின் வாகனங்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டது..

சீலையம்பட்டி அருகே சென்றபோது வைகோ-வின் வாகனம் காவல்துறையால் தடுக்கப்பட்டது.. அங்கே பத்திரிக்கையாளர்கள் குவிந்தனர்.. அவர்களுக்கு பேட்டி கொடுத்துக்கொண்டு இருக்கும்போதே காவல்துறையினர் வைகோ & நெடுமாறனை கைது செய்தனர்.. அதனை அறிந்த அங்கே திரண்டிருந்த பொதுமக்கள் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.. தொடர்ந்து காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்ட வைகோ சென்ற வாகனத்தின் முன் மக்கள் நடந்து சென்றனர்..

சிறிது நேரத்தில் பல கிராமங்களில் இருந்து மக்கள் குவிந்துவிட்டனர்.. ஆங்காங்கே ரோட்டில் உட்கார்ந்து வாகனத்தை தொடர்ந்து செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டனர்.. வைகோ-வை விடுதலை செய்யுமாறு கோசமிட்டனர்.. நிலமை கலவர சூழலுக்கு மாறியது.. உடனே வைகோ-வை அவரது வாகனத்தில் ஏறி மக்களை சமாதானப்படுத்த கேட்டுக்கொண்டதாலும், கலவரம் ஏற்பட விரும்பாத வைகோ தனது பிரச்சார வாகனத்தில் ஏறி மக்கள் மத்தியில் பேசினார்.. அதன்பின் சமாதானம் அடைந்த மக்கள் வாகனம் செல்ல வழிவிட்டனர்.. இதைத்தொடர்ந்து தேனிக்கு வைகோ கைது செய்யப்பட்டு அழைத்துவரப்படுகிறார் என்று தெரிந்துகொண்ட மக்கள் வாகனம் வரும் ஊர்களில் ஆங்காங்கே ரோட்டில் அமர்ந்து கொண்டனர்.. மக்களை திசை திருப்பி காவல்துறையினர் வைகோ-வை கிராமப்புற குறுக்கு சாலைகள் வழியாக நீண்ட தூரம் அலைக்கழித்து பின்னர் தேனியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்துவைத்துள்ளனர்.. வைகோ-உடன் வந்த சிலரை மட்டும் கைது செய்துள்ளனர்.. அனைவரும் மண்டபத்தில் இருக்கிறோம்..

லட்சக்கணக்கான மக்கள் கம்பத்தில் வைகோவுக்காக காத்திருந்த நேரத்தில் காவல்துறை பாதி வழியிலேயே வைகோ-வை கைது செய்துவிட்டனர்.. இந்த செய்தியை அறிந்துகொண்ட கூடலூர், கம்பம் பகுதியில் மக்கள் ஆவேசத்துடன் காவல்துறையுடன் வாக்குவாதத்திலும், கிளர்ச்சியிலும் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

- பாலாவின் இணையம்

No comments:

Post a Comment