Thursday, 29 December 2011

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தீக்குளித்தவரின் குடும்பத்துக்கு ரூ 1 லட்சம்


சென்னை, டிச.29: முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்ட தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த ராமமூர்த்தியின் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் ரூ 1 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம் சின்னமனூர் நகரைச் சேர்ந்த அ.தி.மு.க தொண்டரான ராமமூர்த்தி பாத்திரம் தொழில் செய்துவந்தார். கடந்த சில நாட்களாக நடைபெற்றுவரும் முல்லைப்பெரியாறு அணை தொடர்பான பிரச்னையால் மிகுந்த மனவருத்தத்துடன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று சின்னமனூரில் முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக கேரளா அரசை கண்டித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் நடைபெற்ற கண்டன பேரணியில் கலந்துகொண்டு பின்னர் தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்டார். இதனை அறிந்த முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க சார்பில் ரூ.1லட்சம் தொகையினை இறந்தவரின் குடும்பத்தினர்களுக்கு வழங்கி ஆறுதல் கூறிவர நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை தேனி மாவட்டம் சின்னமனூர் நகருக்கு நேரில் அனுப்பி அனுப்பிவைத்தார்கள்.

அதன்படி ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் சின்னமனூர் நகருக்கு உடனடியாக புறப்பட்டு சென்று இறந்தவரின் சகோதரி செல்வி, சகோதரர்கள் முருகன், வேல்சாமி, செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு ஆறுதல்கூறி அ.தி.மு.க சார்பாக ரூ.1 லட்சம் தொகையினை வழங்கினார்.

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=529851&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

No comments:

Post a Comment