திங்கள்கிழமை, டிசம்பர் 26, 2011, 13:10
சென்னை: உங்கள் பணத்தைச் சாப்பிடும் நடிகர்கள், திரையுலகினர் உங்களுக்காக குரல் கொடுக்கவில்லை. இதை நீங்கள்தான் (மக்கள்) கேட்க வேண்டும் என்றார் இயக்குநர் பாரதிராஜா.
முல்லைப் பெரியாறு அணையைக் காக்கவும், கேரள அரசின் அநியாயப் போக்கைக் கண்டித்தும் மே பதினேழு இயக்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மெரினா கடற்கரையில் கூட்டம் நடைபெற்றது.
இதில், மதிமுக பொதுச் செயலர் வைகோ, இயக்குநர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், "நான் வரலாறு, இலக்கியம் படித்ததில்லை. ஆனால் மக்களை உணர்வுப்பூர்வமாக படித்தவன். தமிழர்கள் பெருந்தன்மையானவர்கள். அந்தப் பெருந்தன்மை காரணமாகவே இன்று தன் உரிமைகளையும் இழந்து வருகின்றனர். இனியும் இந்த நிலை தொடர வேண்டுமா?
முல்லைப் பெரியாறு பிரச்சினை என்பது 5 மாவட்ட மக்களின் பிரச்சினை மட்டும் அல்ல. ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினை. இந்த பிரச்சினையில் மத்திய அரசு தந்திரப்போக்கை கையாள்கிறது.
ஆனால், முல்லைப் பெரியாறு பிரச்சினையில், தமிழக நடிகர்கள் இன்னும் குரல் கொடுக்கவில்லை. உங்கள் உதிரத்தை, பணத்தைச் சாப்பிடுபவர்கள், ஏன் குரல் கொடுக்கவில்லை என்று நீங்கள்தான் கேட்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகம் இனி ஏமாந்தால் பாலைவனமாகிவிடும். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நடிகர்கள் சங்கம் ஏன் குரல் கொடுக்கவில்லை? எதற்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் என்ற பெயர்? இனி இந்தப் பெயரே இருக்கக்கூடாது. தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் எனப் பெயரை மாற்றுங்கள்.
முல்லைப் பெரியாறு அணையைக் காக்கக் கோரி தேனி மாவட்ட மக்கள் நடத்தும் போராட்டங்கள், வன்முறைச் செயல்களாக கேரளத்தில் சித்திரிக்கப்படுகின்றன. தமிழர்கள் கேரள மாநிலத்தில் தாக்கப்படுவதும், விரட்டப்படுவதும் தொடர் கதையாகி வருகின்றன. இனியும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனப் போக்கை கடைப்பிடிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.
English summary
Veteran director Bharathiraja condemned actors and their association for not giving voice for Mullai Periyaru issue.
http://tamil.oneindia.in/movies/interview/2011/12/26-bharathiraja-slams-actors-not-giving-voice-dam-issue-aid0136.html
No comments:
Post a Comment