மலையாளிகளால் அடித்து 100 தமிழக குடும்பத்தினர் கேரளாவில் இருந்து தமிழ் நாட்டுக்கு விரட்டபட்டு உள்ளனர்
கேரளா மாநிலத்தில் உள்ள உடுப்பஞ்சோலை, ஆனைக்கல் மெட்டு, ஆட்டுவாரை, மனத்தோடு, தலையங்கம், சதுரங்கப்பாரை, நெடுங்குன்றம் போன்ற பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்ப்பட்ட தமிழர்கள் வசித்து வருகிறார்கள், அவர்கள் தேயிலை தோட்டம், ஏலக்காய் தோட்டம், காபி தோட்டங்களில் வேலை செய்துவருகிறார்கள்.
முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் கேரளா அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் ஆத்திரம் அடைந்த கேரளக்காரர்கள் அங்கு வசித்து வரும் தமிழர்களை தாக்கி, விரட்டி அடித்து வருகிறார்கள்,
நெடுங்கண்டம், காரித்தோடு, கரியன்மலை போன்ற பகுதிகளில் வீடு வீடாக புகுந்து தமிழர்களை தாக்கி விரட்டி அடித்துள்ளனர், இதை தொடர்ந்து ஏராளமான ஆண்கள், பெண்கள் குழந்தைகளோடு உயிர் தப்பி இரவோடு இரவாக போடி மற்றும் தேவாரம் பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
போடி தாலுகா அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு உணவு மற்றும் தங்குவதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சதுரங்கப்பாரை என்ற இடத்தில் வசித்து வந்த தமிழர்கள் 100 குடும்பத்தினர் கேரளா காரர்களின் அட்டூழியம் தாங்காமல் தேவாரம் வந்தனர் மாவட்ட ஆட்ச்சிதலைவர் பழனிச்சாமி உத்தரவின் பேரில் உத்தமபாளையம் தாசில்தார் சூரியகலா மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் கேரளாவில் இருந்து தஞ்சமாக வரும் அனைத்து தமிழர்களையும் தங்கவைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.
100 க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தை சேர்ந்த 250 பேர் தேவாரத்தில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்..........
(மாலை மலர் - 15.12.2011)
ஈழத்தில் பட்ட காயம் ஆறுவதற்குள்...!
இடுக்கி மாவட்டம் பல பகுதிகளில் ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்யும் தமிழர்கள் தொடர்ந்து மலையாளிகளால் தாக்கப்படுவதால் தேவாரம் பகுதிக்கு அகதிகளாக வந்தனர். சொந்த மண்ணுக்கே அகதியாக வரும் அவலம் தமிழரை தவிர உலகில் வேறு எந்த இனதிற்க்கும் இருப்பதாக தெரியவில்லை.
No comments:
Post a Comment