Wednesday, 21 December 2011
கம்பம் அருகே முற்றுகை போராட்டம்: வைகோ, நெடுமாறன் கைது
கம்பம்: முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசின் போக்கை கண்டிக்கும் வகையில், அம்மாநிலம் நோக்கி செல்லும் சாலைகளில் இன்று முற்றுகைப் போராட்டம் மேற்கொண்ட பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை மதிக்க கேரளம் மறுப்பதையும், புதிய அணை கட்டவேண்டும் என பிடிவாதமாக கேரளம் வற்புறுத்துகிறது.
இதைக் கண்டிக்கும் வகையில் தமிழகத்திலிருந்து கேரளம் நோக்கி செல்லும் 13 சாலைகளிலும் எந்தப் பொருளையும் கொண்டுச்செல்லாமல் தடுக்கும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது.
இதன்படி, இந்த முற்றுகைப் போராட்டம் 13 சாலைகளிலும் இன்று மேற்கொள்ளப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கம்பம் லோயர் கேம்ப் பகுதியில் நடந்த முற்றுகைப் போராட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக் குழுவின் பழ.நெடுமாறனும், மதிமுக பொதுச் செயலர் வைகோவும் கலந்துகொண்டனர். அப்போது, அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
ஐந்து மாவட்ட முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த கே.எம்.அப்பாஸ்,
கம்பமெட்டு பகுதியில் முற்றுகையிட்ட மதிமுக மாநில துணை செயலாளர் பால கிருஷ்ணன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளையிலும் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், அங்கு வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை எல்லை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் நாடுகாணியிலும் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
http://news.vikatan.com/index.php?nid=5625
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment