தமிழர்களை காக்க வேண்டிய தென் மண்டல போலீஸ் ஐஜி ராஜேஷ்தாஸ் கை கால்களை ஒடிக்க சொல்கிறார்
விவசாயிகளை கிரிமினல் ஆக்கிய போலீஸ்!
''தண்ணி யாருக்கு போகுதுங்கறது பத்தி எனக்குக் கவலையில்லை. என்னைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்குதான் முக்கியம். தடை உத்தரவை மீறி போராடுற எல்லாருமே கிரிமினல்ஸ்தான். அதைத்தான் நாம் முக்கியமா கவனிப்பேன். கிரிமினல்ஸ்ஸை நான் விடமாட்டேன். இப்படி திரும்பத் திரும்ப கிரிமினஸ் என்கிற வார்த்தையை பிரஸ்மீட்டில் சொல்லி, முல்லைப் பெரியாறு விஷயத்தில் ஆக்ரோஷமாக போராடி வரும் விவசாயிகளை விமர்சித்திருக்கிறார் தென் மண்டல போலீஸ் ஐஜி-யான ராஜேஷ்தாஸ். இந்த விஷயம் அப்பகுதி விவசாயிகளை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது.
''எந்த அரசியல் கட்சியின் பின்னணியும் இல்லாமல் தாங்களாகவே திரண்ட விவசாயிகளை, அமைதிப்படுத்த வேண்டிய இடத்திலிருக்கும் இதுபோன்ற அதிகாரிகள், எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல பேசுவது... அங்கே பெரிய அளவில் கலவரத்தை உருவாக்கி, தமிழகத் தரப்பின் மீது இந்திய அளவில் அவப்பெயரை உண்டாக்கத்தான்" என்று குமுறுகிறார்கள் விவசாயிகள்.
போலீஸ் டைரியில பொதுமக்கள்னாலே கிரிமினல்தானே!
No comments:
Post a Comment